ஆனைமலை-தாத்தூர் முதல் சுங்கம் வரை உள்ள சாலையோர மரங்கள் வெட்ட ஆலம் விழுது அறக்கட்டளை எதிர்ப்பு

ஆனைமலை செல்லும் சாலையில் தாத்தூர் முதல் சுங்கம் வரை சாலை விரிவாக்கம் என்ற பெயரில் சாலையோரம் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து உதவிக் கோட்டப் பொறியாளரிடம், ஆனைமலை வட்டார ஆலம் விழுது அறக்கட்டளை உறுப்பினர்கள் மனு அளித்தனர்.


கோவை: வளர்ச்சி என்ற பெயரில் கோவை மாவட்டத்தில் இதுவரை இலட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டன. அதற்கு பதிலாக ஒரு செடிகூட நடப்படவில்லை. இதன்காரணமாக வரலாறு காணாத வெப்பக் கொடுமையை தற்போது அனுபவிக்கிறோம். இந்நிலையில் மேலும் ஒரு சீரழிப்புக் கொடுமையைக் கையிலெடுக்கிறது பொள்ளாச்சி கோட்டம் நெடுஞ்சாலைத் துறை.



அதன்படி, ஆனைமலை செல்லும் சாலையில் தாத்தூர் முதல் சுங்கம் வரை சாலை விரிவாக்கம் என்ற பெயரில் சாலையோரம் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் மரங்களை வெட்ட ஆயத்தமாகி உள்ளது. இந்த கொடுஞ்செயலுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு, இந்தத் திட்டத்தை உடனே நிறுத்துமாறு ஆனைமலை உதவிக் கோட்டப் பொறியாளரிடம், ஆனைமலை வட்டார ஆலம் விழுது அறக்கட்டளை உறுப்பினர்கள் இன்று (ஏப்ரல்.17) மனு அளித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...