கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி

இந்திய தேர்தல் ஆணையம் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவை அதிகபடுத்தியுள்ளதற்கு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பாக நன்றி தெரிவிப்பதாக அதன் தலைவர் முகம்மது ரபி கூறியுள்ளார்.


கோவை: கோவை சாய்பாபா காலனி பகுதியில், பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி இன்று (ஏப்ரல்.17) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகம் முழுவதும் சென்னை, ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளுவர், பொள்ளாச்சி, கோவை, ஈரோடு, திருப்பூர் அனைத்து தொகுதிகளிலும் பல்சமய நல்லுறவு இயக்க நிர்வாகிகள் இந்த ஒரு மாத காலமாக திராவிட முன்னேற்றக் கழக கூட்டணிக்கு தேர்தல் பணியாற்றியதாக தெரிவித்த அவர், நாட்டில் சமதர்ம, சகோதரத்துவ, நல்லிணக்க ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக பாடுபட்ட அனைத்து தோழர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பட்டார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்தல் ஆணையத்திற்கு சில கோரிக்கைகளை முன் வைத்தாக கூறிய அவர், குறிப்பாக நாடு முழுவதும் இந்த ஆண்டு வெப்ப சலனம் அதிகமாக இருப்பதால், ஒரு மணி நேரம் பிரச்சார நேரம், மற்றும் வாக்குப்பதிவு நேரத்தையும் அதிகப்படுத்தி தரவேண்டும் என்ற என் கோரிக்கையை பரிசீலித்து, இந்திய தேர்தல் ஆணையம் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவை அதிக படுத்தியுள்ளதற்கு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பாக நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...