கோவை - குருவாயூர் இடையே இயங்கி வந்த அரசு பேருந்து சேவை நிறுத்தம் என தகவல்

மார்ச் மாதம் 13 ஆம் தேதி துவங்கிய பேருந்து சேவை ஏப்ரல் 8 ஆம் தேதி வானிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த சேவை தற்போது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


கோவை: கேரளா போக்குவரத்து துறை சார்பில் குருவாயூரில் இருந்து கோவைக்கு சமீபத்தில் துவங்கப்பட்ட பேருந்து சேவை முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்டுள்ளது என நேற்று (ஏப்ரல்.17) தகவல் வெளியாகியுள்ளது.மார்ச் மாதம் 13 ஆம் தேதி துவங்கிய இந்த பேருந்து சேவை ஏப்ரல் 8 ஆம் தேதி வானிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த சேவை தற்போது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கு சில தனியார் பேருந்து நிறுவனங்களின் சதியே காரணம் என கொழிஞ்சாம்பாறை பேருந்து பயணிகள் சங்கம் குற்றம் சாடியதுடன், கேரள போக்குவரத்து அமைச்சர், கேரளா போக்குவரத்து துறையின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை இயக்க மேலாளர் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளது.இதற்கு இந்த சேவை மூலம் எதிர்பார்த்த வருமானம் வராமல் போனது ஒரு காரணமாக இருக்கலாம் என கேரள போக்குவரத்து துறை தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...