காங்கேயம் அருகே வீரணம்பாளையத்தில் 2 வேன்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - ஓட்டுநர் பலி

நேற்று இரவு வெள்ளகோவிலில் இருந்து காங்கேயம் நோக்கி வந்த வேனும், லோடு‌ வேனும் வீரணம்பாளையத்தில் உள்ள திருச்சி-கோவை தேசிய நெடுஞ்சாலையில் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் உயிரிழந்தார். இரண்டு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த வெள்ளகோவில் அக்கரபாளையம் பகுதியை சேர்ந்தவர் மலைச்சாமி வயது 38. இவர் லோடு வேன் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு வெள்ளகோவில் இருந்து காங்கேயம் நோக்கி வேனில் வந்து கொண்டிருந்த போது எதிரே நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணி வயது 45 என்பவர் ஓட்டி வந்த லோடு‌ வேன் வீரணம் பாளையத்தில் திருச்சி கோவை தேசிய நெடுஞ்சாலையில் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு வேனில் வந்த ஓட்டுநர்களும் மற்றும் மலைச்சாமியுடன் கூலிவேலை செய்யும் வடமாநிலத்தை சேர்ந்த ஜெய்கிஷான் வயது 20 ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.



இதனை அடுத்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தெரிவித்த தகவலின்‌ பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காங்கேயம் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் இடிபாடுகளில் சிக்கிய 3 நபர்களையும் போராடி மீட்டனர். இதில் வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த வேன் ஓட்டுநர் மலைச்சாமி(38) மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார்.



மேலும் படுகாயம் அடைந்த சுப்பிரமணி, ஜெய்கிஷான் ஆகியோரை காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்கு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இந்த விபத்து குறித்து காங்கேயம் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருச்சி கோவை தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்க பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

எனவே வாகன ஓட்டிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அறிவிப்புகள் அல்லது முன்னேற்பாடுகள் ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கூறுகின்றனர்‌. மேலும் கடந்த வாரம் இதே சாலையில் அரசு பேருந்தும், காரும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 நபர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...