கோவையில் நாளை முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஓட்டுப்போட இலவச பேருந்து வசதி

வாக்களிக்க பயணம் மேற்கொள்ளும் 60 வயத்திற்கு மேற்பட்ட மூத்தகுடிமக்கள், பார்வை குறைபாடு மற்றும் மாற்றுத் திறனாளிகளை எவ்வித பயணச்சீட்டும் வழங்காமல் கட்டணமின்றி காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை வாக்களிக்க அழைத்துச் செல்ல ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு கோவை போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது.


கோவை: நாடாளுமன்ற தேர்தல் நாளைய தினம் (19.04.2024) நடைபெற உள்ளது. இந்நிலையில் கோவை போக்குவரத்து கழகம் சார்பில் ஓர் அறிவிப்பானது அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.



அதில் 19.04.2024 அன்று நடைபெறும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக தேர்தல் தினத்தன்று மட்டும் ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை காண்பித்து வாக்களிக்க பயணம் மேற்கொள்ளும் 60 வயத்திற்கு மேற்பட்ட மூத்தகுடிமக்கள், பார்வை குறைபாடு மற்றும் அனைத்து மாற்றுத் திறனாளிகளையும்போக்குவரத்து கழக சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் எவ்வித பயணச்சீட்டும் வழங்காமல் கட்டணமின்றி 19.04.2024 அன்று காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை வாக்களிக்க அழைத்துச் செல்ல அனைத்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்குஅறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...