கவுண்டம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ கருமாரியம்மன் சக்திபீடம் ஸ்ரீ மாசாணியம்மன் திருக்கோவிலின் 28ஆம் ஆண்டு திருக்கல்யாண உற்சவ விழா

ஸ்ரீ கருமாரியம்மன் சக்தி பீடம் பீடாதிபதி சிவ ஸ்ரீ செந்தில் சுவாமிகள், பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசா அடிகளார் மற்றும் சிரவை ஆதீனம் கௌமாரபாளையம் தவத்திரு ராமானந்த குமரகுருபரர் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

கோவை: கோவை, கவுண்டம்பாளையம் கிரிநகர் பகுதியில் 40 ஆண்டுகளுக்கு மேலாக அமைந்திருக்கும் ஸ்ரீ கருமாரியம்மன் சக்திபீடம் ஸ்ரீ மாசாணியம்மன் திருக்கோவிலின் 28ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவ விழா நேற்று (ஏப்ரல்.17) மிக விமர்சியாக நடைப்பெற்றது.

ஸ்ரீ கருமாரியம்மன் சக்தி பீடம் பீடாதிபதி சிவ ஸ்ரீ செந்தில் சுவாமிகள், பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசா அடிகளார் மற்றும் சிரவை ஆதீனம் கௌமாரபாளையம் தவத்திரு ராமானந்த குமரகுருபரர் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இவ்விழாவானது கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஸ்ரீ கருமாரியம்மன் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா கணபதி ஹோமம், திருக்கொடியேற்றம், அவ்வை சண்முகி தெய்வீகக் குழு அம்மன் வேடமணிந்து சிறப்பு நடனம், ஸ்ரீதேவி நகர் வெற்றி விநாயகர் ஆலயத்திலிருந்து அக்னிகம்பம் எடுத்து வருதல், பூவோடு அக்னி ஏற்றுதல் மற்றும் அன்னதானம் வழங்குதல் தொடங்கி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.

மேலும் வருகின்ற (ஏப்ரல்.19) வெள்ளிக்கிழமை அன்று தீபாரதனை, அனைவருக்கும் அன்னதானம், பிரசாதம் வழங்குதல் உடன் விழா இனிதே நிறைவடைய உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...