நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மெழுகுவர்த்தியில் தேர்தல் விழிப்புணர்வு - குனியமுத்தூர் UMT ராஜா அசத்தல்

மெழுகுவர்த்தியில் இந்தியன் வரைபடம், தேர்தல் லோகோ உள்ளிட்டவை வரைந்து, நாடு ஒளிர, நாளை உனது நாள் மறவாதீர் என குறிப்பிட்டு UMT ராஜா வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் வருகிற 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி அரசு மற்றும் கோவை மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த UMT ராஜா என்ற கலைஞர், இந்த தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, விழிப்புணர்வு வீடியோ ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் நேற்று (ஏப்ரல்.17) வெளியிட்டுள்ளார்.

அதில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி, மெழுகுவர்த்தியில் இந்தியன் வரைபடம், தேர்தல் லோகோ உள்ளிட்டவை வரைந்து, நாடு ஒளிர, நாளை உனது நாள் மறவாதீர் என குறிப்பிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...