ரேபிடோ பைக் டாக்ஸியில் நாளை ஓட்டு போட இலவச பயணம் அறிவிப்பு

நாளை ரேபிடோ செயலியில் "VOTENOW" என்ற குறியீட்டை பயன்படுத்தி இலவச சவாரியினை பெறலாம் என்றும் அனைவரும் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்ற நோக்கில் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக ரேபிடோ பைக் டாக்ஸி நிறுவனம் தெரிவித்துள்ளது.


கோவை: மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை ஏப்ரல் 19ஆம் தேதி வாக்களிக்க கோயம்புத்தூர், சென்னை, மதுரை, திருச்சிராப்பள்ளி மற்றும் சேலம் ஆகிய இடங்களில் உள்ள வாக்காளர்களுக்கு இலவச சவாரி வழங்குவதாக பைக் டாக்ஸி சேவையான ரேபிடோ இன்று (ஏப்ரல்.18) அறிவித்துள்ளது.



தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் ஆதரவுடன் 2024 இந்தியப் பொதுத் தேர்தல்களின் போது 'KadamaiKaanaSavaari" முயற்சியை அறிமுகப்படுத்துகிறது. அதன்படி நாளை ரேபிடோ செயலியில் "VOTENOW" என்ற குறியீட்டை பயன்படுத்தி இலவச சவாரியினை பெறலாம்.அனைவரும் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்ற நோக்கில் இந்த முயற்சியானது எடுக்கப்பட்டுள்ளது என நிறுவனம் தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...