வாக்களிக்க சொந்த ஊருக்கு புறப்பட்ட பிற மாவட்ட தொழிலாளர்கள் - திருப்பூர் ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல்

திருப்பூரில் இருந்து வெளி மாவட்ட தொழிலாளர்கள் வாக்களிக்க சொந்த ஊருக்கு புறப்பட்டதால் இன்று வழக்கத்துக்கு மாறாக நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், திருச்சி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.


திருப்பூர்: பின்னலாடை நகரமான திருப்பூரில் அதிகளவிலான வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக தென் மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் திருப்பூரில் தங்கி பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் நாளை தமிழகம், புதுச்சேரி உட்பட ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது.



தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க ஆர்வம் காட்டும் தொழிலாளர்கள் திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட தங்களது சொந்த ஊருக்கு ரயில் மற்றும் பேருந்துகள் மூலம் புறப்பட துவங்கினர்.

இதனால் இன்று வழக்கத்துக்கு மாறாக நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், திருச்சி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களில் அதிகளவிலான பொதுமக்கள் கூட்டம் காணப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...