கோழிகமுத்தி யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த 70 வயதான சாரதா என்ற யானை உயிரிழப்பு

உடல்நலம் குன்றி காணப்பட்ட 70 வயதான சாரதா என்ற பெண் யானை, மருத்துவ சிகிச்சை பலனின்றி கடந்த 17 ஆம் தேதி இரவு உயிரிழந்தது. யானையின் உடலை இன்று காலையில் வனக் கால்நடை மருத்துவக் குழுவினர் உடற்கூறு செய்தனர்.



கோவை: ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சிக் கோட்டம் உலாந்தி வனச்சரகம், கோழிகமுத்தி யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த சாரதா (வயது 70) என்ற பெண் யானை கடந்த 17ஆம் தேதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 



கடந்த 16ஆம் தேதி முதல் உடல்நிலை குன்றிய நிலையில் காணப்பட்ட யானைக்கு உதவி வனக் கால்நடை மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தும், 17ஆம் தேதி இரவு 9:45 மணிக்கு அந்த யானை பரிதாபமாக உயிரிழந்தது.

இதையடுத்து, இன்று காலை கால்நடை மருத்துவக் குழுவினரால் உடற்கூறு பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...