கோவையில் ரயில் தடம் அருகே உள்ள குடியிருப்புகளில் அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக தகவல்

SIHS காலனி, இருகூர் ரயில்வே பாலம் உட்பட்ட 20 இடங்களில் 22 கேமராக்கள், ரத்தினபுரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட 6 இடங்களில் 12 கேமராக்கள், பீளமேடு காவல் நிலையத்துக்கு உட்பட்ட 27 இடங்களில் அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது.


கோவை: கோவை மாநகரில் ரயில் தடங்கள் அருகே உள்ள பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் சி.சி.டி.வி. கண்காணிப்பு இல்லை என்பதால் அப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பது அண்மையில் நடந்த ஒரு சம்பவம் மூலம் வெளிவந்துள்ளது.

கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி அதிகாலை நேரத்தில், 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று பீளமேடு பூரணி நகர் பகுதியில் உள்ள ஒரு தொழிலதிபர் இல்லத்தில் ரூ.10 லட்சம், 30 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்துவிட்டு அருகே உள்ள ரயில் தடம் வழியே சென்று தப்பித்துள்ளது. வெளிச்சம் இல்லாததாலும், கண்காணிப்பு இல்லாததாலும் எளிதில் அவர்கள் தப்பியுள்ளனர்.

இதையடுத்து கோவையில் ரயில் தடங்கள் அருகே உள்ள பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பை பலப்படுத்த அதிநவீன சி.சி.டி.வி. கேமராக்கள் பொறுத்து முடிவெடுக்கப்பட்டு முதல் கட்டமாக 103 இடங்களில் இதை செய்ய கோவை மாநகர காவல் துறையினர் திட்டமிட்டு உள்ளனர். தண்டவாளம் உள்ள வழிநெடுகவே இந்த கேமராக்கள் பொறுத்தப்படவுள்ளன.

அதன்படி, சிங்காநல்லூர் காவல் நிலையத்துக்கு ஒண்டிப்புதூர், SIHS காலனி, இருகூர் ரயில்வே பாலம் உட்பட்ட 20 இடங்களில் 22 கேமராக்கள், ரத்தினபுரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட 6 இடங்களில் 12 கேமராக்கள், பீளமேடு காவல் நிலையத்துக்கு உட்பட்ட 27 இடங்கள் மற்றும் போத்தனூர், துடியலூர், வடகோவை, இருகூர் ஆகிய இடங்களில் உள்ள பகுதிகளில் கார்ப்ரேட் சமூக பொறுப்பு நிதி (CSR) உதவியுடன் விரைவில் அமைக்கப்படவுள்ளது என்று தகவல் இன்று (ஏப்ரல்.18) வெளியாகியுள்ளது.

Newsletter

காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் கூட்டணி தலைவர்கள் புகைப்படம்: தெளிவான வழிகாட்டுதல் கோரிக்கை

கோவை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் S.P. சுதன் நாயக் ராஜ், காங்கிரஸ் கட்சியின் சொந்த நிகழ்ச்சிகளில் கூட்டணி கட்சி...

Coimbatore Police Museum to Offer Free Entry on September 6 for Police Day

The Tamil Nadu Police Museum in Coimbatore will offer free entry to the public and school and college students on Septem...

தாய்லாந்து சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில் கோவை சிறுவன் ரக்‌ஷனுக்கு 2-ம் இடம்

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில், இந்தியா சார்பில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே போட்டியாளராக ‌...

மோசடி வழிகளில் நடைபெறும் மதமாற்றத்தைத் தடுக்க சட்டம் தேவை: கோவையில் VHP பொதுச்செயலாளர் மிலிந்த் பரந்தே

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) சார்பில் நடைபெற்ற இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற மிலிந்த் பரந்தே, கோயி...

வாட்ஸ்-அப் மூலம் கேரளா லாட்டரி சூதாட்டம்: உக்கடத்தில் வாலிபர் கைது; 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் புதிய பஸ் நிலைய கழிப்பறை அருகே வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் கேரளா லாட்டரி எண்களை விற்பனை செய்து சட்டவிரோதமாக...

சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது...