மோசடி வழிகளில் நடைபெறும் மதமாற்றத்தைத் தடுக்க சட்டம் தேவை: கோவையில் VHP பொதுச்செயலாளர் மிலிந்த் பரந்தே

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) சார்பில் நடைபெற்ற இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற மிலிந்த் பரந்தே, கோயில்கள் தொடர்பான முடிவுகளில் இந்து அமைப்புகளுடன் அரசு ஆலோசிக்க வேண்டும், பிற மாநிலங்களில் இருப்பது போல மதமாற்ற சட்டங்கள் இயக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.


கோவை: தமிழகத்தில் இந்துக்களை மதமாற்றம் செய்வது அதிகரித்து வருவதாகக் குற்றம்சாட்டிய விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் பொதுச்செயலாளர் மிலிந்த் பரந்தே, மோசடி உள்ளிட்ட வழிகளில் நடைபெறும் மதமாற்றத்தைத் தடுக்க தமிழக அரசு பயனுள்ள சட்டம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.



கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நடைபெற்ற இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற மிலிந்த் பரந்தே, பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.

விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நாடு முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமான மக்களை அமைப்புடன் இணைக்கும் வகையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், நாடு முழுவதும் சுமார் 7,000 சேவைத் திட்டங்கள் மூலம் சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் சேவையாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.



கோவையில் புதிய ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த மாதம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கூடுதல் ஆம்புலன்ஸ் சேவைகள் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மதமாற்றத் தடுப்பு சட்டம்

தமிழகத்தில் இந்துக்களை மதமாற்றம் செய்வது அதிகரித்து வருவதாகக் கூறிய மிலிந்த் பரந்தே, மோசடி உள்ளிட்ட வழிகளில் நடைபெறும் மதமாற்றத்தைத் தடுக்க தமிழக அரசு பயனுள்ள சட்டம் கொண்டு வர வேண்டும் என்றார்.

உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மதமாற்றத் தடுப்பு சட்டங்கள் இருப்பதை சுட்டிக்காட்டிய அவர், தமிழகத்திலும் இதுபோன்ற சட்டம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினார்.



கால்நடைகள் கடத்தலை தடுக்க வலியுறுத்தல்

கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு பசுக்கள் மற்றும் கால்நடைகள் கடத்தப்படுவதாகக் கூறிய அவர், இரு மாநில எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும், கால்நடை கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தார்.

கோயில் சொத்துகள் தொடர்பாக கோரிக்கை

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்து கோயில்களின் நிதி மற்றும் சொத்துகள், கோயில்களின் பராமரிப்பு மற்றும் இந்து மக்களின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் மிலிந்த் பரந்தே வலியுறுத்தினார்.



கோயில் நிலங்களை பிற பயன்பாடுகளுக்கு வழங்கக் கூடாது என்றும், கோயில் சொத்துகள் மற்றும் நிதி தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்பு விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகளுடன் அரசு ஆலோசிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.



மேலும், அரசு கட்டுப்பாட்டில் உள்ள இந்து கோயில்களை இந்து சமூகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களை அரசு கட்டுப்படுத்தாத நிலையில், இந்து கோயில்களை மட்டும் அரசு கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பாரபட்சமான நடவடிக்கை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.



இந்து அமைப்புகளுடன் ஆலோசிக்காமல் ஒருதலைப்பட்சமாக முடிவுகள் எடுக்கப்பட்டால், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘ஜனஜாக்ரன்’ இயக்கம் நடத்தப்படும் என்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் பொதுச்செயலாளர் மிலிந்த் பரந்தே தெரிவித்தார்.

Newsletter

தாய்லாந்து சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில் கோவை சிறுவன் ரக்‌ஷனுக்கு 2-ம் இடம்

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில், இந்தியா சார்பில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே போட்டியாளராக ‌...

மோசடி வழிகளில் நடைபெறும் மதமாற்றத்தைத் தடுக்க சட்டம் தேவை: கோவையில் VHP பொதுச்செயலாளர் மிலிந்த் பரந்தே

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) சார்பில் நடைபெற்ற இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற மிலிந்த் பரந்தே, கோயி...

வாட்ஸ்-அப் மூலம் கேரளா லாட்டரி சூதாட்டம்: உக்கடத்தில் வாலிபர் கைது; 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் புதிய பஸ் நிலைய கழிப்பறை அருகே வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் கேரளா லாட்டரி எண்களை விற்பனை செய்து சட்டவிரோதமாக...

சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது...

Park Institutions Students Gain Practical Cybersecurity Exposure

Park Institutions organised a seminar on Enterprise Vulnerability Management, providing 150 students from the Computer S...

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...