உடுமலை அருகே கொங்கலக்குறிச்சியில் சாலையோரம் திடீர் தீ விபத்து - புகைமூட்டத்தால் பொதுமக்கள் அவதி

சாலையோரம் இருந்த புற்களில் திடீரென தீப்பற்றி எரியத்தொடங்கியது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் அரைமணி நேரம் போராடி தண்ணீர் ஊற்றி தீயை கட்டுப்படுத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கொங்கலக்குறிச்சி கிராமம் உடுமலை மூணாறு சாலையில் உள்ளது. இந்த நிலையில் இப்பகுதியில் இன்று சாலையோரம் அதிக அளவு புற்கள் இருந்த நிலையில் இன்று எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதால் அதிக அளவு புகைமூட்டம் இருந்த காரணத்தால் அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் கடும் பாதிப்படைந்தனர்.



இதற்கிடையில் தீ விபத்து குறித்து உடுமலை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் நிலைய அலுவலர் லட்சுமணன் தலைமையில் உடுமலை தீயணைப்பு துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி தண்ணீரை ஊற்றி தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...