பொள்ளாச்சியில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப் பதிவு - முதல் முறை வாக்காளர்களுக்கு மரக்கன்று வழங்கி ஊக்குவிப்பு..!

பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் 1,715 வாக்குச்சாவடியில் காலை 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது. வெயில் காரணமாக காலையிலேயே,  வந்து வாக்களிக்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


கோவை: பொள்ளாச்சி: மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 1,715 வாக்குச்சாவடியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 

ஆறு சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில், மொத்தம் 15,97,467 பேர் வாக்களிக்க உள்ளனர், இதில், 7,73,433 ஆண் வாக்காளர்களும், 8,23,738 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினர் 296 பேரும் அடங்கும்.



பொள்ளாச்சி அருகே உள்ள திவான்சாபுதூர் அரசு மேல்நிலைப் பள்ளி வாக்கு சாவடியில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் தனது வாக்கை பதிவு செய்தார். முறை வாக்களித்து வந்த இளம் வாக்காளர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வரவேற்றார். 

அதேபோல, பொள்ளாச்சி பாராளுமன்ற வேட்பாளர் வசந்தராஜன் போத்தனூர் ரயில்வே உயர்நிலைப் பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

இன்று வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில் காலை நேரத்திலேயே வாக்காளர்கள் வந்து வாக்களித்து செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...