திருப்பூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு - கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்புராயன் வாக்கு பதிவு செய்தார்..!

இன்று திருப்பூர் மக்களவைத் தொகுதியில் 16 லட்சத்து 8 ஆயிரத்து 521 வாக்காளர்கள், 1745 வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க உள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மக்களவைத்தொகுதியில் - திருப்பூர் வடக்கு, தெற்கு, அந்தியூர், பவானி, பெருந்துறை, கோபிசெட்டிபாளையம் ஆகிய 6 சட்டப் பேரவவைத் தொகுதிகள் உள்ளன. இதில், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த திருப்பூர் வடக்கு, தெற்கு ஆகிய தொகுதிகளும், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி செட்டிபாளையம் ஆகிய 4 தொகுதிகள் உள்ளன. 

இதில், பெருந்துறையில் 264, பவானியில் 289, அந்தியூரில் 262 கோபிசெட்டிபாளையத்தில் 296, திருப்பூர் வடக்கு 385, தெற்கு 248 என மொத்தம் 1745 வாக்குச் சாவடிகள் உள்ளன. திருப்பூர் மக்களவைத் தொகுதியில் 7 லட்சத்து 91 ஆயிரத்து 24 ஆண் வாக்காளர்களும், 8 லட்சத்து 17 ஆயிரத்து 245 பெண் வாக்காளர்களும், 252மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 16 லட்சத்து 8 ஆயிரத்து 521 பேர் உள்ளனர்.



திருப்பூர் மக்களவைத் தொகுதியில் 293 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. அந்த வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினர் மற்றும் போலீஸார் கூடுதலாக ஈடுபடுவதுடன், அந்த மையங்கள் முழுவதும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

வெயிலின் தாக்கம் காரணமாக காலை முதலே பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். 

திருப்பூர் பத்மாவதிபுரம் பள்ளியில், திருப்பூர் திமுக கூட்டணி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரும் தற்போது எம்பியுமான சுப்புராயன் காலையிலேயே தனது வாக்கை பதிவு செய்தார்.

இன்று மாலை வாக்குப்பதிவுநிறைவடைந்ததும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான திருப்பூர் எல்.ஆர்.ஜி. கல்லூரிக்கு ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட வாகனத்தில் துணை ராணுவத்தினர் மற்றும் பலத்த போலீஸார் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்படும்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...