திருப்பூரில் பேருந்துகளை சிறைப்பிடித்த பொதுமக்கள் – போதுமான அளவு பேருந்துகள் இயக்கப்படாததால் ஆத்திரம்

திருப்பூரில் இருந்து தொழிலாளர்கள் வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்ல திருவண்ணாமலை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு போதுமான அளவு பேருந்துகள் இயக்கப்படாததால் பேருந்துகளை சிறைப்பிடித்த பொதுமக்கள் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூரில் இருந்து தொழிலாளர்கள் வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்ல போதுமான அளவு பேருந்துகள் இயக்கவில்லை என குற்றம் சாட்டி கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் பேருந்துகளை சிறை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்றைய தினம் நடைபெற உள்ளது. 100% அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதன் காரணமாக திருப்பூரில் பணிபுரியும் வெளி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிப்பதற்கு ஆர்வம் காட்டி கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையத்திற்கு படை எடுத்தனர்.

இருப்பினும் திருவண்ணாமலை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு போதுமான அளவு பேருந்துகள் இயக்கப்படவில்லை என குற்றம் சாட்டி, பேருந்துகளை முற்றுகையிட்ட பொதுமக்கள் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்பட்டதால் பேருந்துகளில் பொதுமக்கள் ஒருவருக்கொருவர் மூச்சு விடுவதற்கு கூட இடமில்லாமல் இடிபாடுகளுக்குள் சிக்கி பயணிக்கும் நிலை ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...