வால்பாறை அருகே அக்காமலை எஸ்டேட் 203 வது வாக்குச்சாவடியில் இயந்திர கோளாறு - 45 நிமிடம் தாமதமாக வாக்கு பதிவு தொடக்கம்

வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட்டில் உள்ள வாக்குச்சாவடி மைய எண் 203 ல் முதல் வாக்கு பதிவின் போது இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. விரைந்து வந்த அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு இயந்திர கோளாறை சீர் செய்தனர். இதனால் சுமார் 45 நிமிடம் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள 68 வாக்குச்சாவடி மையத்திலும் காலை ஏழு மணி முதல் வாக்குப்பதிவு துவங்கப்பட்டுள்ளது இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்கு பதிவு செய்து வருகின்றனர். வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் 203 வது வாக்குச்சாவடியில் இயந்திர கோளாறு காரணமாக சுமார் 45 நிமிடம் தாமதமாக வாக்கு பதிவு துவங்கியது.



கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வால்பாறை சட்டமன்ற தொகுதி மேல்பகுதியில் சுமார் 68 வாக்குச்சாவடி மையங்களில் இன்று காலை சரியாக 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட்டில் உள்ள வாக்குச்சாவடி மைய எண் 203 ல் முதல் வாக்கு பதிவின் போது இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு இயந்திர கோளாறை சீர் செய்தனர்.



இதனால் சுமார் 45 நிமிடம் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது. அதன்பிறகு,94 வயது மூதாட்டி தனது வாக்கை பதிவு செய்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...