கோடந்தூர் பகுதியில் அரசு பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடி மையத்தில் மலைவாழ் மக்கள் வாக்களிப்பு

தேர்தல் சமயத்தில் மட்டும் வரும் அரசியல் பிரமுகர்கள், பழமையான வீடுகளை புதுப்பித்து தருகிறோம், புதிய வீடுகள் கட்டித் தருகிறோம், அடிப்படை வசதிகளை செய்து தருகிறோம் என வாக்குறுதி தந்துவிட்டு தேர்தல் முடிந்ததும் கண்டுகொள்வதில்லை என மலைவாழ் மக்கள் குற்றம்சாட்டினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட கோடந்தூர், ஆட்டுமலை, பொற்பார்க்குடி உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு கோடந்தூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் சாவடி அமைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை முதல் மலைவாழ் மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தனர்.



பின்னர் மலைவாழ் மக்கள் கூறும் பொழுது, கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாகவே கோடந்தூர் மலை கிராமத்தில் வசித்து வருகின்றோம். தேர்தல் சமயத்தில் அரசியல் பிரமுகர்கள் நேரில் வருகை புரிந்து பழமையான வீடுகள் புதுப்பித்து தருகிறோம். புதிய வீடுகள் கட்டித் தருகிறோம். குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருகிறோம் என வாக்குறுதிகள் தந்துவிட்டு செல்கின்றனர்.

ஆனால் தேர்தல் முடிந்ததும் எதுவும் செய்து தரப்படுவதில்லை. இருப்பினும் மலைவாழ் மக்கள் ஆகிய நாங்கள் இன்று எங்கள் ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளோம் என்று தெரிவித்தனர். எனவே இனிவரும் காலங்களில் கோடந்தூர் உள்ளிட்ட மலை கிராமங்களில் மலை வாழ் மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டுமென தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...