வாக்குகள்தான் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகிறது – நடிகர் விஜய் அறிக்கை

பெரும் ஊழல்களை நடத்திக் கொண்டே நம் மக்களை சாதி, மத, மொழி, இன அடிப்படையில் பிளவுபடுத்த துடித்துக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். அவர்களை எதிர்த்து இந்த தேர்தலில் நீங்கள் அளிக்கக்கூடிய ஒவ்வொரு வாக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.


கோவை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. பெரும் ஊழல்களை நடத்திக் கொண்டே நம் மக்களை சாதி, மத, மொழி, இன அடிப்படையில் பிளவுபடுத்த துடித்துக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். அவர்களை எதிர்த்து இந்த தேர்தலில் நீங்கள் அளிக்கக்கூடிய ஒவ்வொரு வாக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

அந்த வாக்குகள்தான் இந்திய நாட்டின் ஜனநாயகத்தை, மதச்சார்பின்மையை, அரசியல் சட்டத்தை, பன்முகத்தன்மையை தமிழ்நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகிறது. அந்த வாக்குகள் தான் உழவர்கள், மீனவர்கள், பெண்கள், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மக்களின் துயரத்தை துடைக்கப் போகிறது. இந்தியா அரசியலமைப்புச் சட்டம் நமக்கு தந்துள்ள சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதி, சுயமரியாதை ஆகியவற்றை காக்க யார் முன்களத்தில் நிற்கிறார்கள் என சிந்தியுங்கள். உங்களின் வாக்கு தமிழ்நாட்டையும் - இந்தியாவையும் காக்கட்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...