சுங்கம் பகுதியில் வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார் கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி

சுங்கம் பகுதியில் உள்ள நிர்மலா பெண்கள் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, பின்னர் ஓட்டுபோட்டுவிட்டு வந்தவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.


கோவை: கோவை நாடாளுமன்ற தொகுதிக்கான ஓட்டுப்பதிவு பல்வேறு மையங்களில் இன்று (ஏப்ரல்.19) விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தேர்தலில் மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் என்ற திட்டத்தின் கீழ் வாக்குச்சாவடி மையங்களில் மரக்கன்றுகள் குவித்து வைக்கப்பட்டு இருந்தது.

பின்னர் வாக்கு போட்டு விட்டு வருபவர்களுக்கு இந்த மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இந்த நிலையில் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் கோவை சுங்கம் பகுதியில் உள்ள நிர்மலா பெண்கள் கல்லூரிக்கு இன்று மதியம் சென்றார். பின் வாக்குச்சாவடியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வாக்குப்பதிவு குறித்து அங்குள்ள அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த மரக்கன்றுகளை ஒட்டு போட்டுவிட்டு வருபவர்களுக்கு வழங்கினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...