உடுமலை அருகே விருகல்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் முறைகேடு – பொதுமக்கள் தேர்தல் புறக்ணிப்பு

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலும், விவசாயிகளுக்கு மறுபயிர் கடன் வழங்காத காரணத்தினாலும் தேர்தலை புறக்கணிப்பாக பொதுமக்கள் தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே விருகல்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் முறைகேடு நடைபெற்றது. இந்த நிலையில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், விவசாயிகளுக்கும் மறுபயிர் கடன் வழங்காமல் காலதாமதம் பண்ணுவதை கண்டித்தும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக கடந்த வாரம் பேனர் வைத்து கருப்பு கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.



எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெறாததால் பொதுமக்களும், விவசாயிகளும் ஒருமனதாக இந்த நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக முடிவு செய்துள்ளனர். இந்த கூட்டுறவு சங்கத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட அனைவரது சொத்துக்களையும் முடக்கம் செய்ய வேண்டும் எனவும், விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் உரிய நீதி கிடைக்க வேண்டும் எனவும், அதனால் தேர்தல் புறக்கணிப்பை முடிவு செய்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...