கோவை பாஜகவிற்கு ஆதரவான தொகுதி - சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேட்டி

நேர்மையான, திறமையான ஆட்சியை பிரதமர் மோடி தந்து உள்ளார். மக்கள் தரும் ஆதரவு எங்களது உற்சாகத்தை பல மடங்கு உயர்த்தி உள்ளது. பாஜக விற்கு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே ஆதரவு உள்ளது என்பதை இந்தத் தேர்தல் மாற்றி காட்டும் என சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் இன்று (19.04.2024) காலை 7: 00 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்நிலையில், தனது வாக்கை செலுத்தி விட்டு பாஜக மகளிரணி தலைவியும், சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் 39 தொகுதிகளிலும் வெற்றி வேட்பாளராக களத்தில் நின்று கொண்டு இருக்கிறார்கள். அத்தனை தரப்பு மக்களும் மோடி மீது நல்ல அபிப்பிராயம் கொண்டு உள்ளனர்.

நேர்மையான, திறமையான ஆட்சியை பிரதமர் மோடி தந்து உள்ளார். மக்கள் தரும் ஆதரவு எங்களது உற்சாகத்தை பல மடங்கு உயர்த்தி உள்ளது. பாஜக விற்கு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே ஆதரவு உள்ளது என்பதை இந்தத் தேர்தல் மாற்றி காட்டும். கிராமம், நகரங்களில் ஒரே மாதிரியான ஆதரவு பா.ஜ.க விற்கு கிடைக்கும்.

கோவை தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலைக்கு கிடைக்கும் ஆதரவு, கோவையில் தாமரை மலரும் என்ற நம்பிக்கையை‌ ஏற்படுத்தி உள்ளது. அண்ணாமலை லட்சக் கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். கோவை பாஜகவிற்கு ஆதரவான தொகுதி. இந்த பகுதி முழுக்க பாஜக கணிசமான வாக்கு வங்கியை கொண்டு உள்ளது. இந்த தேர்தலில் பாஜக வாக்கு வங்கி பல மடங்கு அதிகரிக்கும். கோவையில் அண்ணாமலை வெற்றி பெறுவார். மூன்றாவது முறையாக பிரதமர் ஆட்சியமைக்கையில் பாஜக வின் 400 எம்.பி.க்களில் அண்ணாமலையும் ஒருவராக இருப்பார் என்று கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...