உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு பூவோடு எடுக்கும் நிகழ்வு துவக்கம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

அருள்மிகு மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு வருகின்ற செவ்வாய்க்கிழமை மாலை வரை பூவோடு எடுக்கும் நிகழ்வு நடைபெறும் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருள்மிகு மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 9-ம்தேதி பூச்செறிதல் நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது .இந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியும், தேவாங்கர் சமூக நல மன்றத்தின் சார்பில் கொடியேற்றம் விழாவும் வெகு சிறப்பாக நடைபெற்றது.



இதற்கிடையில் நேற்று இரவு பூவோடு எடுக்கும் நிகழ்வு தொடங்கியது. இதற்காக கோவில் நிர்வாகத்தின் சார்பில் டோக்கன் வழங்கப்பட்டது. பக்தர்கள் வரிசையில் நின்று 250 ரூபாய் செலுத்தி டோக்கன் பெற்று பூவோடு எடுத்தனர். இன்று முதல் வருகின்ற செவ்வாய்க்கிழமை மாலை வரை பூவோடு எடுக்கும் நிகழ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வெள்ளிக்கிழமை என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாரியம்மன் கோவிலில் குவிந்தனர்.

மேலும் தேர் திருவிழாவுக்கு தினமும் கூட்டம் அதிகமாக மாரியம்மன் கோவிலுக்கு வருவதால் முக்கிய இடங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் கொடுக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...