சிங்காநல்லூர் பேருந்து நிலையம் முன் மக்கள் திடீர் சாலை மறியல் – போக்குவரத்து பாதிப்பு

நீண்ட நேரம் காத்திருந்தும் அரசு பேருந்துகள் வராததால் பயணிகள் பேருந்து நிலையத்தின் முன்பாக சிங்கநல்லூர்-வரதராஜபுரம் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அங்கு பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


கோவை: தமிழ்நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு (ஏப்ரல்.19) நடைபெற்றது. இதற்காக கோவையில் இருந்து தென் மாநிலங்களுக்கு செல்ல 200க்கும் மேற்பட்ட பேருந்து சேவைகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் (ஏப்ரல்.19) காலை கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திற்கு தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஏராளமான பயணிகள் வருகை தந்தனர். ஆனால் போதுமான அரசு பேருந்துகள் இயக்கப்படாததால், நீண்ட நேரமாக பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.



தனியார் பேருந்தில் செல்லலாம் என்றால் டிக்கெட் விலையை உயர்த்தி விற்கின்றனர். மேலும் மாலை 6 மணிக்கு முன்பாக சொந்த ஊர்களுக்கு சென்றால் மட்டுமே வாக்களிக்க முடியும் என்பதால், அவர்கள் தவித்தனர். இதனிடையே நீண்ட நேரம் காத்திருந்தும் அரசு பேருந்துகள் வராததால் பயணிகள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் பேருந்து நிலையத்தின் முன்பாக சிங்கநல்லூர்-வரதராஜபுரம் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அங்கு பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாரும், போக்குவரத்து துறை அதிகாரிகளும், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...