காங்கேயத்தில் கருப்பு கொடி ஏந்தி தேர்தல் புறக்கணிப்பு - பிஏபி பாசன விவசாயிகள் அதிரடி முடிவு

தண்ணீர் திருட்டை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடமும், காவல் நிலையத்திலும் புகார் அளித்தும் எந்தவொரு நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பகுதியில் பிஏபி சங்க விவசாயிகள் சுமார் 250க்கும் மேற்பட்டோர்கள் பிஏபி பாசன கால்வாயில் தண்ணீர் திருட்டு எதிர்த்தும், சமச்சீர் பாசன வசதியை வலியுறுத்தியும் நேற்று காங்கேயம் வட்டாச்சியர் அலுவலகத்தில் வட்டாச்சியர் மயில்சாமியிடம் தங்களின் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைத்தனர்.

இந்த நிலையில் அதிகாரிகள் சார்பில் விவசாயிகளுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடத்தாததால் விவசாயிகள் சார்பில் நேற்று விவசாயிகள் மற்றும் விவசாயி குடும்பத்தினர் வாக்குப்பதிவு செய்யவில்லை. மேலும் பிஏபி விவசாய சங்க இடத்தில் கருப்புக்கொடி ஏந்தியும். அதே இடத்தில் கருப்பு கொடி கட்டியும் கண்டனத்தை தெரிவித்தனர்.



இதுகுறித்து விவசாயிகள் தெரிவித்ததாவது, தண்ணீர் திருட்டை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை இது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடமும், காவல் நிலையத்திலும் புகார் அளித்தும் எந்தவொரு நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை. இந்த தண்ணீர் திருட்டுக்கு அதிகாரிகளும் உடன் நிற்கின்றனர். எனவே விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே நாங்கள் நேற்று காங்கேயம் வட்டாச்சியர் அலுவலகத்தில் வட்டாச்சியர் மயில்சாமியிடம் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைத்தோம். இதனை அடுத்து அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக முடிவெடுத்து சுமார் 500க்கும் மேற்பட்டோர் தங்கள் ஜனநாயக கடமையை செலுத்தாமல் புறக்கணித்துள்ளோம்.

இந்த நிலை நீடித்தால் நாங்கள் அடுத்த கட்ட நடவடிக்கையை தொடர உள்ளோம். எனவே இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தேர்தல் ஆணையம் மற்றும் காங்கேயம் வட்டாச்சியர் ஆகியோர் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் கருப்புக்கொடி ஏந்தியும் பிஏபி விவசாயி சங்க இடத்தில் கருப்பு கொடிகளை கட்டியும் தங்களின் கண்டனத்தை தெரிவித்த பிஏபி விவசாயிகள் சிறிது நேரத்தில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...