கோவை நல்லம்பாளையத்தில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது - பிணையில் விடுவிப்பு

நல்லாம்பாளையம் மாநகராட்சி நடுநிலைபள்ளியில் அமைக்கப்பட்டிருந்த பூத் எண் 145ல் இரண்டாவது முறையாக வாக்களிக்க முயன்ற திருநாவுக்கரசு என்பவரை போலீசார் கைது செய்து பின்னர் பிணையில் விடுவித்தனர்.


கோவை: கோவை நல்லாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு(வயது 52). நேற்று (ஏப்ரல்.19) நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கோவை மக்களவைத் தொகுதி, நல்லாம்பாளையம் மாநகராட்சி நடுநிலை பள்ளி பூத் எண் 145ல் வாக்களிக்க சென்ற போது கையில் மை வைக்கும் ஊழியரிடம் வலது கை ஆள்காட்டி விரலை காண்பித்துள்ளார்.

அப்போது அங்கிருந்து அதிகாரிகள் இடது கை ஆள்காட்டி விரலை பார்க்கும் பொழுது அவர் ஏற்கனவே ஓர் இடத்தில் வாக்களித்துவிட்டு இரண்டாவது முறையாக இங்கு வாக்களிக்க வந்தது தெரிய வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் அதிகாரி லதா மகேஸ்வரி கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பெயரில்திருநாவுக்கரசை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது தனக்கு காந்திபுரம் மற்றும் நல்லாம்பாளையம் ஆகிய இரண்டு இடங்களில் ஓட்டு இருந்ததாகவும் காந்திபுரம் பகுதியில் வாக்களித்து விட்டு நல்லாம்பாளையம் வந்ததாக தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து திருநாவுக்கரசின் மீது 171(D) மற்றும் 171 F(2) ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்த போலிசார் பின்னர் அவரை பிணையில் விடுவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...