பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குப்பெட்டி இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் பூட்டி வைப்பு

நா.மகாலிங்கம் தொழில்நுட்பக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பெட்டி இயந்திரங்கள் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சர்மிளா, பொள்ளாச்சி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கேத்திரின் சரண்யா, வருவாய்த் துறையினர் மற்றும் அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.


கோவை: தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முடிவடைந்த நிலையில் அனைத்து பகுதிகளிலும் வாக்கு பெட்டி இயந்திரங்களில் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் 1715 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு வாக்குப் பதிவு நடைபெற்றது.



நேற்று இரவு முதல் வாக்குப் பெட்டி இயந்திரங்கள் பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள நா.மகாலிங்கம் தொழில்நுட்பக் கல்லூரியில் அமைக்கபட்டுள்ள வாக்கு மையத்தில் வைக்கும் பணி நடைபெற்றது.

மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சர்மிளா, பொள்ளாச்சி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கேத்திரின் சரண்யா, வருவாய்த் துறையினர் மற்றும் அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...