கோவை மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்த காரமடை அம்பேத்கர் நகர் மக்கள்

கோவை காரமடையின் அம்பேத்கர் நகர் மக்கள் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடிக்கு நன்றி தெரிவித்தனர். கடந்த நான்கு ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் பெற போராடிய மக்களுக்கு மின்சாரம், தண்ணீர் வசதிகள் செய்து தரப்பட்டன.


கோவை: கோவை மாவட்டத்தின் காரமடை அம்பேத்கர் நகரில் வசித்து வரும் மக்கள், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடிக்கு நன்றிக் கடன் தெரிவித்தனர். 2020 முதல் இந்த பகுதியில் கட்டப்பட்ட வீடுகளில் வசிக்க தொடங்கிய மக்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லாத துயரங்களை சந்திக்க வேண்டியிருந்தது. இதற்காக அவர்கள் பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கள் சமர்ப்பித்தும், போராட்டங்கள் நடத்தியும் வந்தனர்.

கடந்த மூன்று மாதங்களாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்ந்து மனுக்கள் சமர்ப்பிப்பதோடு, இந்த பிரச்சினைக்ள் செய்திகள் மூலமாகவும் விளக்கப்பட்டன. இது கவனத்தை ஈர்த்ததால், கோவை மாவட்ட ஆட்சியர் அவசரகால நடவடிக்கை எடுத்து, மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதிகள் அமைத்து கொடுத்தார். இதனையடுத்து, மக்கள் சாலை வசதி மற்றும் மற்ற அடிப்படை வசதிகள் செய்து தருமாறு கேட்டு இன்று நன்றி தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...