உடுமலையில் வெண்பட்டுக்கூடு விலை சரிவு; தமிழக அரசு ஊக்கத்தொகை வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

உடுமலை மற்றும் சுற்றிலும் விவசாயிகள், வெண்பட்டுக்கூடு விலை சரிந்ததால், தமிழக அரசிடம் தொழில்நுட்ப உதவிகள் மற்றும் ஊக்கத்தொகைகள் வழங்க கோரியுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வருடம் முழுவதும் 3000 ஏக்கருக்கு மேல் வெண்பட்டுக் கூடு உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்சமயம் கடுமையான வெப்பம் காரணமாக பட்டுக்கூடு உற்பத்தி கடினமாக பாதித்துள்ளது.



வெயிலான் தாக்கம் காரணமாக பால் புழுக்கள் இறப்பு மல்பெரிக்கு நீர் பற்றாக்குறை பகல் நேரங்களில் புழுக்கள் சோர்வடைந்து பட்டுக்கூடுகள் சிறிதாக கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளது.



ஒரு கிலோ வெண்பட்டுக்கூடு சராசரியாக 700 ரூபாய் விற்று வந்த நிலையில் இப்போது அதன் விலை 450 ரூபாய் வரை குறைந்துள்ளது. 100 முட்டை தொகுதிகளுக்கு 90 கிலோ வரை கூடு கிடைத்த நிலையில், தற்போது 30 முதல் 40 கிலோ மட்டுமே உற்பத்தி ஆகும் என்று விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகள், கர்நாடக அரசைப் போல தெளிவிக்கப்பட்ட திட்டங்களை மற்றும் ஊக்கத்தொகைகளைப் பெற கோரிக்கையிட்டுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...