கோடை விடுமுறை காலத்தில் கோவை - பரௌனி இடையே சிறப்பு ரயில் சேவை

கோடை விடுமுறையையொட்டி கோவை - பரௌனி இடையே சிறப்பு ரயில் சேவைகள் ஏப்ரல் 23 முதல் ஜூன் 28 வரை இயங்கும். இந்த ரயில் பல முக்கிய நிலையங்களில் நிற்கும்.


கோவை: சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் கோடை விடுமுறையொட்டி ஏப்ரல் 20 அன்று அறிவித்துள்ளபடி, கோவை மற்றும் பரௌனி இடையே வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றது. ஏப்ரல் 23 முதல் ஜூன் 25 வரை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் கோவையில் இருந்து காலை 11.50 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06059) வியாழக்கிழமைகளில் பிற்பகல் 2.30 மணிக்கு பரௌனி நிலையத்தை சென்றடையும்.

மறுமாா்க்கமாக, பரௌனி நிலையத்தில் இருந்து ஏப்ரல் 26 முதல் ஜூன் 28 வரை வெள்ளிக்கிழமைகளில் இரவு 11.45 மணிக்கு புறப்படும் பரௌனி - கோவை வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 06060) திங்கள்கிழமைகளில் அதிகாலை 3.45 மணிக்கு கோவை நிலையத்தை சென்றடையும். இந்த ரயிலானது திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, பெரம்பூா், கூடூா், நெல்லூா், விஜயவாடா, ஏலூரு, ராஜமுந்திரி, பாா்வதிபுரம், ராயகடை, முனிகுடா, சம்பல்பூா், ரூா்கேலா, ஹாட்டியா, ராஞ்சி, தன்பாத், சித்தரஞ்சன், மதுப்பூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்றும் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...