தாராபுரம் அருகே கோழிக் கழிவுகளை கொட்ட வந்த ஈச்சர் வாகனத்தை பொதுமக்கள் சிறைபிடித்தனர்

தாராபுரம் அருகே மூலனூர் ஊராட்சி நாச்சிபாளையம் பிரிவில் பொதுமக்கள் கேரளாவில் இருந்து வரும் ஈச்சர் வாகனத்தை சிறைபிடித்தனர். கோழிக் கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு வந்த சம்பவம்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாச்சிபாளையம் பிரிவு என்ற இடத்தில் கேரளாவில் இருந்து வந்த ஈச்சர் வாகனம் பொதுமக்களால் சிறைபிடிக்கப்பட்டது.



கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் இருந்து கோழிக் கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகள் எடுத்து செல்லப்பட்டது.



இது குறித்து நாச்சிபாளையம் பிரிவின் பொதுமக்கள் கூறியபோது, கேரளாவில் இருந்து மலப்புரம் பகுதியில் கோழி கழிவுகளை மற்றும் மருத்துவ கழிவுகளை ஏற்றுக்கொண்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கொட்டச் செல்வது ஒரு தொடர்ச்சியாக நடந்து வருகிறது.



பின்னர் மூலனூர் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சி தலைவர் தண்டபாணி இந்த செய்தியை அறிந்து அதிகாரிகளிடம் ஈச்சர் வாகனத்தை ஒப்படைக்கச் செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...