கோவையில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த ஒடிசா வாலிபர் கைது

கோவை அன்னூரில் கஞ்சா சாக்லேட் விற்பனையில் ஈடுபட்ட ஒடிசா வாலிபர் கைது. கஞ்சப்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் 12 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்.


கோவை: கோவை மாவட்டத்தில் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஏப்ரல் 20 அன்னூர் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனை நடைபெறுவதாக பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் கஞ்சப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகில் சோதனை மேற்கொண்டபோது, கஞ்சா சாக்லேட்டை விற்பனைக்கு வைத்திருந்த ஒடிசா நாட்டைச் சேர்ந்த ராஜேஷ்குமார் சேதி(30) என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர், அவரிடமிருந்து 12 கிலோ கஞ்சா சாக்லேட் போலீசார் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...