உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு புஷ்ப அலங்காரத்தில் அம்மன் ஊர்வலம்

நேற்று இரவு மாரியம்மன் சூலத்தேவருடன் புஷ்ப அலங்காரத்தில் ரிஷப வாகனத்தில் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்போது நடைபெற்ற ஊர்வலத்தில் பக்தர் ஒருவர் அழகு குத்தி நேர்த்திகடன் செலுத்தினார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் இரவு 7 மணியளவில் மாரியம்மன் சூலத்தேவருடன் வெவ்வேறு விதமான வாகனங்களில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.

அந்த வகையில் நேற்று இரவு மாரியம்மன் சூலத்தேவருடன் புஷ்ப அலங்காரத்தில் ரிஷப வாகனத்தில் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்போது ஊர்வலத்தில் பக்தர் ஒருவர் நேர்த்திக்கடனாக வாயில் அழகு குத்தி ஊர்வலத்தில் கலந்து கொண்டார்.



கோவிலில் இருந்து புறப்பட்டு உடுமலை-பொள்ளாச்சி சாலை, தளி ரோடு, சதாசிவம் வீதி, தங்கம்மாள் ஓடை வழியாக கோவில் வரையிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...