கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி - உடுமலை அருகே தமிழக கேரளா எல்லையில் வாகன சோதனையில் கால்நடைத்துறை அலட்சியம்

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி உள்ளநிலையில் உடுமலை அருகே தமிழக எல்லை பகுதியான ஒன்பதாறு சோதனை சுவாடி பகுதியில் தற்சமயம் கால்நடை துறையினர் சோதனை செய்யாமல் அலட்சியமாக இருப்பதா பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஒன்பதாவது சோதனை சுவாடி வழியாக மூணாறு உள்ளிட்ட கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த நிலையில் தற்சமயம் கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் கோழி பண்ணைகளில் அதிக அளவு வாத்துகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இறந்த வாத்துக்களை ஆய்வு செய்த போது பறவை காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள பறவை பண்ணைகளில் பராமரிக்கப்பட்ட வாத்து, கோழிகள் குழி தோண்டி புதைக்கப்பட்டன. இதற்கிடையில் கேரளாவில் பரவும் பறவை காய்ச்சல் அண்டை மாநிலமான தமிழகத்திற்குள் வராமல் தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் விதமாக கேரளாவை ஒட்டி உள்ள தமிழக கேரளா எல்லை மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டு உள்ளது.



இந்த நிலையில் தமிழக கேரள எல்லையான தென்காசி, களியக்காவிளை, ஆனைகட்டி, வாளையார் உடுமலை உட்பட 12 சோதனை சுவாடிகளில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டன. இதற்கிடையில் பல இடங்களில் உள்ள தமிழக கேரளா பகுதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் உடுமலை அருகே தமிழக எல்லை பகுதியான ஒன்பதாறு சோதனை சுவாடி பகுதியில் தற்சமயம் கால்நடை துறையினர் சோதனை செய்யாமல் அலட்சியமாக உள்ளனர். எனவே கேரளாவில் இருந்து வரும் வாத்து, கோழி, முட்டை, கோழி தீவனங்களுடன் வரும் வாகனங்களை திருப்பி அனுப்ப வேண்டும். மேலும் காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்களை ஏற்றி வரும் அனைத்து கனரக வாகனங்களுக்கும் கிருமி நாஷினி தெளிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...