கோவையில் புலனாய்வு பிரிவு தலைமை காவலர் தற்கொலை – குடும்ப பிரச்சனை காரணமா? என போலீசார் விசாரணை

15 நாட்களுக்கு முன்பு லண்டனுக்கு மனைவி வேலைக்கு சென்றநிலையில், வீட்டில் தற்கொலை செய்துகொண்ட சரவணம்பட்டி புலனாய்வு பிரிவு தலைமை காவலர் பாலகுமாரின் உடலை கைப்பற்றி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: சரவணம்பட்டி புலனாய்வு பிரிவு தலைமை காவலராக பணிபுரிபவர்பாலகுமார்(38). இவரது மனைவி தனியர் நட்சத்திர குழும ஹோட்டல்களில் பணிபுரிந்து வருகிறார். அவர் பதவி உயர்வு பெற்று 15 நாட்களுக்கு முன்பு லண்டனுக்கு சென்றுள்ளார். அதனால், தனது இரண்டு குழந்தைகளையும் சேலத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் விட்டுச் சென்றுள்ளார்.

பாலகுமார் தனது மனைவியுடன் தொலைபேசியில் சண்டையிட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் தேர்தல் பணியில் கலந்து கொண்ட அவர், கடந்த ஏப்ரல் 20ம் தேதி காலை வீட்டிற்கு திரும்பினார்.சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் வேலைக்கு வராமல் இருந்துள்ளார். மேலும் அவரது பெற்றோரும் அவரை அணுக முடியவில்லை என தெரிகிறது.

இதனால் பெற்றோர் சரவணம்பட்டி காவல் நிலையத்தை தொடர்பு கொண்டனர். அதனை தொடர்ந்து போலீஸார் நேற்று (ஏப்ரல்.21) இரவு வீட்டிற்கு விரைந்தனர். அப்போது பாலகுமார் தூக்கில் தற்கொலை செய்து கொண்டதை கண்டறிந்துள்ளனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...