செல்வபுரம் பகுதியில் கொள்ளையடிக்க ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 5 பேர் கைது

செல்வபுரம் உள்ளிட்ட சில பகுதிகளில் கொள்ளையடிக்க திட்டமிட்டு ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த ஐந்து பேரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை செல்வபுரம் பகுதியில் ஆயுதங்களுடன் ஒரு கும்பல் சுற்றுவதாக செல்வபுரம் போலீசாருக்கு நேற்று (ஏப்ரல்.21) தகவல் வந்தது. அதன் பேரில், போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது என்.எஸ்.கே. தெரு அருகே காலி மைதானத்தில் ஒரு கும்பல் நின்றிருந்தது. அவர்கள் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பிக்க முயன்றனர். போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

இதில், அவர்கள் செல்வபுரம் உள்ளிட்ட சில பகுதிகளில் கொள்ளையடிக்க திட்டமிட்டு ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கோவை செல்வபுரம் கல்லாமேட்டை சேர்ந்த அப்பாஸ் (24), பிரகதீஷ் (24), முபில் (24), செட்டிவீதியை சேர்ந்த சஞ்சீவ் குமார் (28), செல்வபுரம் நஞ்சப்பா கார்டனை சேர்ந்த சன்பர் (21) ஆகிய 5 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 5 கத்தி, செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...