கோவை மத்திய சிறையில் கைதி உயிரிழப்பு - ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை

கொலை முயற்சி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ரங்கசாமி என்ற கைது கடந்த 19ம் தேதி ரத்தி வாந்தி எடுத்து மயங்கி கீழே விழுந்தார். ஆனால் மருத்துவர்கள் அளித்த தொடர்சிகிச்சை பலனிக்காமல் நேற்று அவர் உயிரிழந்துவிட்டார்.


கோவை: நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் ரங்கசாமி (82). இவர் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த பிப்ரவரி 7ம் தேதி முதல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், கடந்த 19ம் தேதி அவர் திடீரென ரத்த வாந்தி எடுத்து மயங்கினார். சிறை மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் சிறை கைதிகளுக்கான வார்டில் சேர்க்கப்பட்டு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று ஏப்ரல்.21 உயிரிழந்தார். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...