கோவையில் கோடை காலத்தில் பொது மக்களுக்கு குடிநீர் வழங்குவது குறித்து ஆட்சியர் தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம்

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக வழங்கப்படும் குடிநீர் திட்டங்களின்படி, அனைத்து திட்டங்களிலிருந்து எடுக்கப்படும் தண்ணீர் கடைக்கோடி குடியிருப்புகள் வரை, சென்றடைவதை அதிகாரிகள் உறுதி செய்திட வேண்டும் என்று கோவை ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கோடை காலத்தில் பொது மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்குவது குறித்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அமைப்புகளுடன், குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று (ஏப்ரல்.22) நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்வேதா சுமன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) கமலகண்ணன், வருவாய் கோட்டாட்சியர்கள் கோவிந்தன், பண்டரிநாதன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், நீர்வளத்துறை, மாநகராட்சி, நகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி பேசியதாவது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக வழங்கப்படும் குடிநீர் திட்டங்களின்படி, அனைத்து திட்டங்களிலிருந்து எடுக்கப்படும் தண்ணீர் கடைக்கோடி குடியிருப்புகள் வரை, சென்றடைவதை மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த உள்ளாட்சி அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும்.

பராமரிப்புத் திட்டத்தில் உள்ள குடிநீர் குழாய்களில் ஏற்படும் கசிவுகள், வெடிப்புகள் மற்றும் மின் மோட்டாரில் ஏற்படும் பழுதுகள் சரிசெய்யும் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவும், பாதுகாக்கப்பட்ட குடிதண்ணீர் தொய்வின்றி கிடைக்கவும் அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும். தினசரி வரையறுக்கப்பட்ட குடிநீர் ஊரகக் குடியிருப்புகளுக்கும், நகரங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறதா என்பதை உறுதி செய்யவும், தங்கள் பகுதிகளின் குடிநீர் தேவைகள் தொடர்பாக, மாநகராட்சி உதவி ஆணையர்கள், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

இந்த ஆண்டு மழை குறைந்த அளவில் பெய்துள்ளது. தற்போது கோடைகாலமாக இருப்பதால், பொதுமக்களுக்கு, நீரின் தேவையை உணர்த்தி சிக்கனமாக பயன்படுத்துவது குறித்தும், நீரின் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் அனைவரும் தேவைக்கு அதிகமாக தண்ணீரை பயன்படுத்தாமல், சிக்கனமாக குடிநீரை பயன்படுத்த வேண்டும் என ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...