உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா - அலகு குத்தி பறவைக்காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திகடன்

பறவைக்காவடி வாகனத்தில் வந்த பக்தர்கள் அந்தரத்தில் சுழன்றபடி ஊர்வலமாக வந்தனர். இந்த நிகழ்ச்சி பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் இருந்தது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த 9ந் தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கிய நிலையில் முக்கிய விழாவான வரும் 25-ம் தேதி தேரோட்டம் நடைப்பெறுகிறது. இந்த நிலையில் தேர்த்திருவிழாவைமுன்னிட்டு சபரிமலை ஸ்ரீ சபரிபாட்டி உழவாரப்பணி பேரவை சார்பில் பறவைக்காவடி மற்றும் அலகுகுத்தும் விழா, 9-ம் ஆண்டு பறவைக்காவடி தூக்க நேர்ச்சை உற்சவம், தேவராட்டம், முளைப்பாரிகளுடன் ஊர்வலம் ஆகியவை நடைப்பெற்றது.



உடுமலை மத்திய பஸ் நிலையம் அருகே தொடங்கிய ஊர்வலத்தை ஆதீனம் கூனம்பட்டி ராஜ சரவண சுவாமிகள் துவைக்க வைத்தார். மேலும் பறவைக்காவடி முன்பு பெண்கள் அலகு குத்தியும், 20க்கு மேற்பட்ட பக்தர்கள் முதுகில் அலகு குத்திக்கொண்டு, ஒவ்வொரு கிரேன் வாகனத்திலும் அந்தரத்தில் தொங்கியபடி ஊர்வலமாக வந்தனர்.

இந்த வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக பழைய பஸ் நிலையம், தளி சாலை, வடக்கு குட்டைவீதி, சதாசிவம் வீதி, தங்கம்மாள் ஓடை வீதி, கொல்லம்பட்டறை வழியாக மாரியம்மன் கோவிலில் நிறைவு பெற்றது.இதில் அலகுகுத்தி வந்தவர்கள் அந்த வாகனங்களில் அந்தரத்தில் தொங்கிக்கொண்டு கைகளில் வாள் ஏந்தியபடி அங்குமிங்கும் ஆடியபடி வந்தனர். ஒரு வாகனத்தில் வந்த பக்தர்கள் அந்தரத்தில் சுழன்றபடி வந்தனர். இந்த நிகழ்ச்சியை, சாலையின் இரண்டு புறமும் திரளானவர்கள் நின்று பார்த்து பரவசம் அடைந்தனர். மேளதாளம் வாத்தியத்துடன் நடந்த இந்த நிகழ்ச்சி பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்தது.



இந்த பறவைக்காவடி ஊர்வலத்திற்கு முன்பு 100க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்தும், ஆண்கள் தேவராட்டம் ஆடியும் சென்றனர். பறவை காவடிக்கான ஏற்பாடுகளை சபரிமலை சபரி பாட்டி உழவாரப்பணி பேரவை நிர்வாகிகள் ராஜன் மற்றும் அற்புதராஜ் உட்பட பலர் செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...