வெள்ளலூர் எமதர்மராஜா கோவில் நடை அடைப்பு – கிரிவலம் செல்ல வந்த பக்தர்கள் ஏமாற்றம்

கோவில் நிலம் தொடர்பாக கோவை கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருவதால் கோவில் நடை திறக்கப்படாமல் பூட்டப்பட்டு இருந்தது. இதை அறியாமல் இன்று காலையில் கிரிவலம் செல்ல கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.


கோவை: கோவை வெள்ளலூரில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான அருள்மிகு சித்திர புத்திர எமதர்மராஜன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பௌர்ணமி தினத்தன்று அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கிரிவலம் வருவது வழக்கம். இந்த நிலையில் சித்ரா பௌர்ணயமான இன்று (23.04.2024) ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வதற்காக கோவிலுக்கு வந்தனர்.



ஆனால் கோவில் நிலம் தொடர்பாக கோவை கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருவதால் கோவில் நடை திறக்கப்படாமல் பூட்டப்பட்டு இருந்தது. மேலும் இது குறித்து அறிவிப்பு போஸ்டரும் ஒட்டப்பட்டு இருந்தது. இதை அறியாமல் இன்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மேலும் கிரிவலம் செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...