கோவை அரசு மருத்துவமனையில் 100 கிலோ செம்பு கம்பிகளை திருடிய பிளம்பர் கைது

சிறிது சிறிதாக செம்பு கம்பிகளை திருடி விற்பனை செய்த கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த ஜெயதாஸ்(28) என்ற பிளம்பரை போலீசார் கைது செய்து பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மின் பணிக்காக பொருட்கள் இருப்பு அறையில் செம்பு கம்பிகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த கம்பிகள் அடிக்கடி திருடு போனது. இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் அண்மையில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில், அங்கு பிளம்பராக வேலை பார்த்த கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த ஜெயதாஸ்(28) என்பவர் திருடியது தெரியவந்தது. அவர் சிறிது, சிறிதாக ரூ. 85 ஆயிரம் மதிப்பிலான 100 கிலோ செம்பு கம்பிகளை திருடி விற்பனை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை நேற்று ஏப்ரல்.22 கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...