துறையூர் அருகே சாலை விரிவாக்கத்தின் போது குடிநீர் குழாய் உடைப்பு -ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் விரயம்

கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் சாலை பணி வரிவாக்கத்தின்போது, குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் அதிக அளவு விரயமானது பொதுமக்களை வேதனை அடைய செய்துள்ளது.


கோவை: பொள்ளாச்சியை அடுத்த துறையூர் பகுதியில் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு சாலை விரிவாக்கத்திற்காக பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சாலை பணியின் போது நேற்று மாலை கம்பாலப்பட்டி கூட்டுக் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் விரையமானது.



இந்த கம்பாலபட்டி கூட்டு குடிநீர் மூலம் சமத்தூர் மற்றும் கோட்டூர் பேரூராட்சிகள், எஸ்.நல்லூர், ஜல்லிப்பட்டி, கரியான்செட்டிபாளையம், கம்பாலபட்டி ஆகிய ஐந்து ஊராட்சிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் குடிநீர் குழாய் உடைந்து பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் அதிக அளவு விரயமானது பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...