ராகுல்காந்தி எங்கு உள்ளார் என தெரியவில்லை? – கோவையில் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

வாக்குரிமை மறுக்கப்பட்டது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஏன் பேசவில்லை?. திமுக, திமுக கூட்டணி கட்சிகள் மக்களின் ஜனநாயக உரிமை மறுக்கப்பட்டது தொடர்பாக ஏன் வாய்த்திறக்காமல் மெளனம் சாதிக்கின்றனர்?. இதில் உள்நோக்கம் உள்ளது என்று தமிழிசை சவுந்தராஜன் பேசியுள்ளார்.


கோவை: முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, தேர்தல் சுமுகமாக நடந்து முடிந்துள்ளது. தேர்தல் திருவிழாவை நடந்து முடிந்துள்ளதற்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் நிலையில், பல லட்சம் வாக்குகள் விடுபட்டிருப்பதற்கு வேதனை அளிக்கிறது. உரிமை மறுக்கப்பட்டிருப்பதற்கு வேதனை, கையில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தும் கொத்து கொத்தாக வாக்குரிமை மறுக்கப்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது.



ஜனநாயகத்தில் சரியில்லை என்பது தான் கருத்து . தேர்தல் ஆணையம் இன்னும் கூட கவனத்தில் இருந்திருக்கலாம். காங்கிரஸ் ஆட்சியில் வேற்றுமையை விதைத்து விட்டு, தற்போது நாங்கள் நின்ற தொகுதியில் கூட இஸ்லாமிய பெண்கள் முழு ஆதரவை வழங்கினார்கள். ஹஜ் யாத்திரையில் பெண்கள் தனியாக செல்லும் வகையில் விசாவில் சில தளர்வு ஏற்படுத்தியவர் பிரதமர். இஸ்லாமியர்களுக்கும் இவர்கள் தான் பாதுகாவலர்கள் என்பது போல் பிம்பத்தை ஏற்படுத்தி வாக்கு பெற எண்ணுகின்றனர். 1 கோடி பேர் ஊடுருவல் உள்ளது.

ராகுல்காந்தி எங்கு உள்ளார் என தெரியவில்லை? வெளிநாட்டிற்கு சென்றிருப்பதாக சொல்லப்படுகிறது. முக்கியமான தேர்தலின் போது நாட்டு மக்களுடன் இல்லாமல் மரியாதைக்குரிய பிரதமரை குறை சொல்கின்றனர். வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது திமுகவிற்கு அக்கறை இல்லையா? வாக்குரிமை மறுக்கப்பட்டது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஏன் பேசவில்லை? திமுக, திமுக கூட்டணி கட்சிகள் மக்களின் ஜனநாயக உரிமை மறுக்கப்பட்டது தொடர்பாக ஏன் வாய்த்திறக்காமல் மெளனம் சாதிக்கின்றனர்? உள்நோக்கம் உள்ளது.



சென்னை டி.நகரில் ஏற்கனவே சரி பார்த்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உரிமை பறிக்கப்பட்டாலும் தவறு தானே. நான் உட்பட நிச்சயம் அனைவரும் வெற்றிபெற போறோம். திமுக கூட்டணி கட்சிகள் மெளனம் சாதிக்கிறார்கள்? தோல்வி பயம் தான் காரணம் வேண்டுமென்றே நீக்கப்பட்டுள்ளது.

கஞ்சாவிற்கு, ரேஷன் அடிதடி, அரசியலில் அடிதடி அரிசிக்கும் அடிதடி எங்கு போனாலும் போதை, கடத்தல் மோடியை விமர்சனம் செய்வோம் என சொல்வது சரியில்லை. மற்றவர்கள் தான் mentally disturbed, பிரதமர் மிக தெளிவாக உள்ளார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைக்கு பிரதமர் எதிர்வினை ஆற்றியுள்ளார் தவிர உள்நோக்கம் கிடையாது. துறை இல்லாத அமைச்சர் இங்கு சிறையில் உள்ளார். சிறை துறை கொடுத்துள்ளார்களா? உங்கள் கட்சியில் வாரிசுகளை தவிர வந்துவிட முடியுமா? வேற்றுமைகளை களைந்தவர்கள் நாங்கள் தான் இந்து பண்டிகைகளுக்கு ஏன் வாழ்த்துக்கள் சொல்வதில்லை? ஏன் ஏற்றத்தாழ்வுகள் முதல் கையெழுத்து போட்டு நீட் தேர்வை நீக்குவோம் என சொன்ன ஸ்டாலின் உச்ச நீதிமன்றம் கொண்டு வந்த நீட் தேர்வை ரத்து செய்ய ஏன் கையெழுத்து போடவில்லை?. இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...