கோவையில் பல்வேறு இடங்களில் கொள்ளை - போலீசார் விசாரணை

ஓட்டு போடுவதற்காக ரயில்வே ஊழியர் தேனிக்கு சென்றநிலையில், கோவையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஆறு பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர் திருடிச்சென்றுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை திருச்சி ரோடு ரயில்வே காலனியை சேர்ந்தவர் நாகராஜ் (35) ரயில்வே ஊழியர். இவர் கடந்த 18ஆம் தேதி ஓட்டு போடுவதற்காக தனது சொந்த ஊரான தேனிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து நேற்று ஏப்ரல்.23 கோவை திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.

உள்ளே சென்று பார்த்த போது அலமாரியில் வைத்திருந்த 6 பவுன் தங்க நகைகளை காணவில்லை. வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர் திருடி சென்று விட்டார். பின்னர் இது குறித்து நாகராஜ் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜீவ சத்யா (18). கல்லூரி மாணவரான இவர் கோவை சிங்காநல்லூரில் தங்கி இருந்து தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு BE படித்து வருகிறார். இவர் நேற்று (ஏப்.23) கல்லூரிக்கு செல்வதற்காக தனது நண்பர் ஒருவருடன் எல் அண்ட் டி பைபாஸ் ரோட்டில் உள்ள ரயில்வே பாலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது பைக்கில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் ஜீவ சத்தியாவை வழிமறித்தனர். பின்னர் அவரை மிரட்டி அவரிடம் இருந்த செல்போன், வெள்ளி செயின் ஆகியவற்றை பறித்து தப்பி சென்றனர். பின்னர் இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் அவர் நேற்று அளித்த புகாரின் பேரில் போலீசார் செல்போன் பறித்து சென்ற மூன்று பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.

கோவை குனியமுத்தூர் நரசிம்மபுரத்தைச் சேர்ந்தவர் மரகதம்(55). இவர் நேற்று (ஏப்ரல்.23) பஸ்ஸில் மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோயிலுக்கு வழிபட சென்றார். பின்னர் அங்கிருந்து பஸ்சில் மரப்பாலம் பேருந்து நிறுத்தத்திற்கு வந்த மரகதம் மற்றொரு பஸ்சில் ஏறி தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் ஒருவர் அவரது கழுத்தில் இருந்த 4 பவுன் தங்க செயினை பறித்து சென்றனர். பின் நகை காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்த மரகதம், இது குறித்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். பின் அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகை பறித்து சென்ற நபரை தேடி வருகின்றனர்.

கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(62) நகை வியாபாரி. இவர் ஆர்டரின் பெயரில் நகை கடைகளுக்கு தங்கம் விற்பனை செய்து வருகிறார். ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை விழுப்புரம் சென்று கடைகளுக்கு தங்க நகைகளை சப்ளை செய்வது வழக்கம். இதேபோல் அவர் நேற்று முன்தினம் இரவு தனக்கு கடைகளில் ஆர்டர் எடுத்து கொடுக்கும் சாந்தகுமார் என்பவருடன் பைக்கில் காந்திபுரம் பஸ் நிலையம் சென்று கொண்டிருந்தார்.

அவர்கள் பேரூர் ரோடு, செல்வ சிந்தாமணி குளம் அருகே சென்ற போது பின்னால் காரில் வந்த கும்பல் பைக் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி இரண்டு பேரும் கீழே விழுந்தனர். பின்னர் காரில் இருந்து இறங்கி வந்த 4 பேர் கொண்ட கும்பல் ராஜேந்திரன் மற்றும் சாந்தகுமாரை வாள் மற்றும் பைப்பால் சரமாரியாக தாக்கினர். பின்னர் ராஜேந்திரன் பேக்கில் வைத்திருந்த ரூ. 13 லட்சம் மதிப்பிலான 270 கிராம் தங்க நகைகளை பறித்துக் கொண்டு காரில் தப்பினர்.

அந்த வழியாக சென்றவர்கள் தாக்குதலில் காயம் அடைந்த இருவரையும் மீட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் இது குறித்து ராஜேந்திரன் செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் நேற்று ஏப்ரல்.23 புகார் அளித்தார். பின் அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து ரூ.13 லட்சம் தங்க நகைகளை வழிப்பறி செய்த கும்பலை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...