கணக்கம்பாளையம் கிராம நிர்வாக அலுவலரின் மரண வாக்குமூலத்துடன் வருவாய் கோட்டாட்சியிடம் உறவினர்கள் புகார்

கருப்புசாமி இறப்புக்கு காரணமாக இருந்த மக்கள் மித்திரன், ஆசிரியர் மணியன் மற்றும் கணக்கம்பாளையம் கிராம உதவியாளர் சித்ரா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்.டி.ஓ ஜஸ்வந்த் கண்ணனிடம் உறவினர்கள் மனு அளித்துள்ளனர்.


திருப்பூர்: கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த கூலநாயக்கன் பட்டி பனைமரத்து பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் கருப்புசாமி (வயது 38).



முதுகலை புள்ளியியல் பட்டதாரியான இவர் திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுகா கணக்கம்பாளையம் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 23-ம் தேதி அதிகாலையில் கருப்புசாமி தென்னை மரத்துக்கு வைக்கும் மாத்திரைகளை சாப்பிட்டு விட்டு மொட்டை மாடியில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு மொட்டை மாடிக்கு சென்ற அவரது தாயார் கருப்புசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றார். ஆனால் சிகிச்சை பலனின்றி கருப்புசாமி இறந்து விட்டார்.

இது குறித்து கோமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.



இந்த நிலையில் கருப்புசாமி மரண வாக்குமூலம் எழுதி வைத்துவிட்டு உயிரிழந்தது தெரியவந்தது. அந்த கடிதத்துடன் உடுமலைக்கு வருகை தந்த அவரது உறவினர்கள் இன்று உடுமலை ஆர்.டி.ஓ ஜஸ்வந்த் கண்ணனிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கருப்புசாமி இறப்பு காரணமாக இருந்த மக்கள் மித்திரன், ஆசிரியர் மணியன் மற்றும் கணக்கம்பாளையம் கிராம உதவியாளர் சித்ரா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

காலஞ் சென்ற கிராம நிர்வாக அதிகாரி கருப்புசாமி வாக்குமூலத்தில் கூறியதாவது, என் சாவுக்கு காரணம் எனது கிராம உதவியாளர் சித்ரா மற்றும் மக்கள் மித்திரன், ஆசிரியர் என உலா வரும் மணியன் இருவருமே பொறுப்பு. கடந்த ஒரு வருடம் காலம் கடும் இன்னல்கள் கொடுத்து இருந்தும் அதையும் தாண்டி என்னால் எனது கிராம மக்களுக்கு பல நன்மைகள் செய்து வந்த நிலையில் வேண்டுமென்றே தமிழகம் முழுவதும் எனது மனத்தினை களங்கம் விளைவித்தும் மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தி விட்டனர்.

இதனால் கடும் மன உளைச்சலுடன் கடந்த இரு மாதமாக போராடி பணி செய்து வந்த நிலையில் வேற எங்கும் பொது இடத்தில் சென்றாலும் அதே அவப்பெயருடன் சுற்றி வரும் சூழல் மன உளைச்சலுடன் நான் உயிரினும் மேலான விஏஓ பணி செய்ய விடாமல் தடுத்த சித்ராவை கோமங்கலம் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது அருமை உடன்பிறந்த நண்பர்கள், அம்மா, அப்பா மற்றும் பெரிதும் நேசிக்கும் எனது புதுக்கோட்டை நண்பர்கள், சமூக ஆர்வலர்கள், டி.என்.பி.எஸ்.சி நண்பர்களை நான் மிகவும் துன்பத்தில் ஆழ்த்தி விட்டு செல்கிறேன். எனது மனம் மிகவும் வேதனையுடன் தமிழருக்கு மானம் தான் பெரிது என்ற நிலையுடன் உயிர் விடுகிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் உருக்கமாக கூறப்பட்டு உள்ளது.



சம்பந்தப்பட்ட நபர்கள் மீது இரண்டு நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் தமிழக முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட படுவோம் என தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினரால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. உடுமலைப் பகுதியில் பணியாற்றிய கிராம நிர்வாக அலுவலர் இறப்பதற்கு முன் மரண வாக்குமூலம் எழுதிய பின் தற்கொலை செய்த சம்பவம் உடுமலை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...