கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கியதை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

வாக்களிக்க இயலாத பொதுமக்கள், பாரதிய ஜனதா கட்சியுடன் சேர்ந்து கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜூன் 4-ந் தேதிக்குள் வாக்குரிமை அளிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஏராளமான பொதுமக்கள் தங்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறவில்லை என்று வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.



அவ்வாறு வாக்களிக்க இயலாத பொதுமக்கள் ஒன்று திரண்டு பாரதிய ஜனதா கட்சியுடன் சேர்ந்து கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு இன்று (ஏப்ரல்.25) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களுக்கு வருகிற ஜூன் 4-ந் தேதிக்குள் வாக்குரிமை அளிக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...