வடமதுரை நியாய விலைக்கடை அருகே கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றக் அப்பகுதி மக்கள் கோரிக்கை

நியாயவிலைக் கடை அருகே குப்பைகளை கொட்டாதவாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களும், நியாய விலை கடையில் பணிபுரிபவர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.


கோவை: கோவை, துடியலூரை அடுத்துள்ள வடமதுரை பேருந்து நிலையம் அருகே நியாய விலைக்கடை அமைந்துள்ளது. இந்த நியாய விலை கடை அருகே அப்பகுதியில் உள்ள கடைகள், ஹோட்டல்கள் போன்றவற்றில் சேதாரம் ஆகும் குப்பைகளை தற்போது கொட்டி வருகின்றனர்.



இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது.



மேலும் இதனால் நோய் தொற்று ஏற்படவும் வாய்ப்புள்ளது. மேலும் நியாய விலைக்கடையில் பணி செய்பவர்களும், நியாய விலை கடையில் பொருள் வாங்க வரும் பொது மக்களும் இதனால் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இங்கு காட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றியும், மேலும் இங்கு குப்பைகளை கொட்டாதவாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் நியாய விலை கடையில் பணிபுரிபவர்கள் இன்று (ஏப்ரல்.25) கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...