உடுமலையில் புகழ்பெற்ற மாரியம்மன் கோவில் திருத்தேரோட்டம் - லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

வண்ண துணிகள் மூலம் அலங்கரிக்கப்பட்ட தேரானது மாரியம்மன் கோவில் பகுதியில் இருந்து யானையின் உதவியுடன் தொடங்கியது. விழாவில் உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அதிகளவில் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் 300 ஆண்டுகள் பழமையான அருள்மிகு மாரியம்மன் கோவில் தேர்திருவிழா கடந்த ஏப்ரல் 9 ம்தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது. பின்னர் கம்பம் போடுதல் கொடியேற்றம் நிகழ்ச்சி, தினமும் முக்கிய வீதியில் அம்மன் திருவீதி உலா, திருக்கல்யாணம், மாவிளக்கு பூவோடு எடுத்தல் உடம்பில் கத்தி போட்டு நூதன வழிபாடு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் வெகு சிறப்பாக நடைபெற்றது.



இந்நிலையில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது.



ஒன்பது நிலைகளுடன் கூடிய திருத்தேர் அலங்கரிக்கப்பட்ட கலசம் ஏற்றப்பட்டு வண்ண துணிகள் மூலம் அலங்கரிக்கப்பட்ட தேரானது மாரியம்மன் கோவில் பகுதியில் இருந்து கேரளாவில் இருந்த வந்த சாது( 57) என்ற ஆண் யானையின் உதவியால் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களால் வடம் பிடித்து துவங்கிய தேர் பழனி சாலை, தளி ரோடு, குட்டை திடல் தலைகொண்ட அம்மன் கோவில்வீதி, கொல்லம்பட்டறை வழியாக வந்து மாரியம்மன்கோவிலை அடைந்தது.



தேர்திருவிழாவில் உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அதிகளவில் வருகை அம்மனை தரிசனம் செய்தனர்.



உடுமலை மாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு உடுமலை-பழனி, பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. தேர் திருவிழாவை முன்னிட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா தலைமையில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...