கடும் வறட்சி காரணமாக கோழிகமுத்தி யானைகள் முகாமிலிருந்து வேறு இடங்களுக்கு யானைகள் இடமாற்றம்

கோழிகமுத்தி யானைகள் வளர்ப்பு முகாமில் கடும் வறட்சி நிலவுவதால், அங்கிருந்த 20 வளர்ப்பு யானைகளை, மானாம்பள்ளி பகுதிக்கு ஐந்து யானைகள், வறகளியாறுக்கு ஐந்து யானைகள், சின்னார் பகுதிக்கு 10 யானைகள் என 20 யானைகளையும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.


கோவை: பொள்ளாச்சி அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள டாப்ஸ்லிப் பகுதியில் கோழிகமுத்தி வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இங்கு வனத்துறை கட்டுப்பாட்டில் 26 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானைகளில் சில யானைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு கும்கியாக மாற்றி பல்வேறு பகுதிகளுக்கு வனப்பணிக்காக அழைத்துச் செல்லபடுகிறது.



தற்போது கோழிகமுத்தி யானைகள் வளர்ப்பு முகாமில் கடும் வறட்சி ஏற்பட்டு யானைகளுக்கு போதுமான அளவு நீர் இருப்பு இல்லாததால் அங்கிருந்த 20 வளர்ப்பு யானைகளை நீர் உள்ள மானாம்பள்ளி பகுதிக்கு ஐந்து யானைகள், வறகளியாறுக்கு ஐந்து யானைகள், சின்னார் பகுதிக்கு 10 யானைகள் என ஆகிய மூன்று வனப்பகுதிகளுக்கும் யானைகளை அனுப்பி அங்கு பராமரித்து வருகின்றனர்.

இந்த யானைகள் குறைந்தபட்சம் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு பராமரிக்கப்பட்டு மீண்டும் கோழிகமுத்தி யானைகள் முகாமிற்கு கொண்டு வரப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...