திறந்தவெளி ஒதுக்கீட்டு இடத்தில் பூங்கா - ஜூலை 1ம் தேதிக்குள் பதிலளிக்க கோவை மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவு

ஓ.எஸ்.ஆர். இடம் மீட்கப்பட்டு பூங்கா அமைப்பது தொடர்பான வழக்கில் ஜூலை 1ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு கோவை மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.


கோவை: பார்சன் குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஓ.எஸ்.ஆர்., இடத்தில் அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்றுவது தொடர்பாக பதிலளிக்க மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கோவை, நஞ்சுண்டாபுரம் ரோடு, பார்சன் குடியிருப்பில், 610 வீடுகள் உள்ளன. இக்குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஓ.எஸ்.ஆர்., இடத்தில் 'கார் பார்க்கிங்', 'ஸ்டோர்' அமைக்கப்பட்டுள்ளதால், இடத்தை மீட்டு பூங்கா அமைத்துத்தரக்கோரி அப்பகுதியினர் மாநகராட்சிக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

இதையடுத்து, கடந்த, 2019ம் ஆண்டு அங்கு வசிக்கும் பதிவுபெற்ற பொறியாளர்கள் சங்க முன்னாள் தலைவர் கனகசுந்தரம் ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்திருந்தார். இதுதொடர்பாக, ஜூலை 1ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, கனகசுந்தரம் கூறுகையில்,''இங்குள்ள ஓ.எஸ்.ஆர்., இடத்தில் பூங்கா அமைத்து பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரக்கோரி மாநகராட்சியிடம் கடந்த, 2019ல் மனு அளித்தேன். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடுத்தேன். தற்போது, அது உயிர்பெற்றுள்ளது. ஓ.எஸ்.ஆர்., இடம் மீட்பு விஷயத்தில் ஜூலை 1க்குள் கட்டாயம் மாநகராட்சி பதில் அளிக்க வேண்டும். இல்லையேல் அபராத நடவடிக்கை எடுக்கப்படும் என, ஐகோர்ட் எச்சரித்துள்ளது. எனவே, பணிகள் வேகமெடுக்கும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது,'' என்றார்.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...